internet

img

ஆப்பிள் நிறுவனம் விரைவில் புதிய செயலிகள் மற்றும் மென்பொருள்களை அறிமுகம் செய்ய திட்டம்

ஆப்பிள் நிறுவனம் புதிய செயலிகள், அம்சங்கள் மற்றும் டெவலப்மெண்ட் டூல்களை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மென்பொருள் நிகழ்வில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு, வரும் ஜூன் 3-ஆம் தேதி துவங்குகிறது. இந்நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், மேக், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் டி.வி. உள்ளிட்டவற்றை இயக்கும் இயங்குதளங்களை அப்டேட் செய்ய இருக்கிறது. இவற்றில் ஐபோன் செயலிகளான மேப்ஸ், ரிமைண்டர்ஸ், மெசேஜ் போன்றவற்றை ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்த இருக்கிறது.

இத்துடன் ஆப்பிள் வாட்ச் சாதனத்துக்கு புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதவிர உடல்நலம் சார்ந்து இயங்கும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படலாம் எனவும், புதிய அப்டேட்களின் மூலம் பயனர்கள் ஆப்பிள் மியூசிக், விரைவில் வெளியாக இருக்கும் டி.வி. பிளஸ் வீடியோ ஸ்டிரீமிங் சேவை உள்ளிட்ட புதிய சேவைகள் இயக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


;